Friday, September 14, 2018

நம்மைச்சுற்றியுள்ள பருப்பொருள்கள்- பொருள்களைப்பிரித்தல்(Leavel 1)

ஆர்வமூட்டல்
*அரிசியில் கல் இருந்தால் என்ன செய்வீர்கள்?
*தேநீரில் இருந்து தேயிலையை என்ன செய்வீர்கள்?
*தேயிலையை எதை கொண்டு பிரிப்பீர்கள்?
விளக்குதல்
எல்லா கலவையையும் அப்படியை பயன்படுத்த முடியாது.காபி மற்றும் ஐஸ்கிரீம் போன்றவற்றை பிரிக்க இயலாது.பிரித்தெடுத்தல்-கலவையில் இருந்து பல பொருட்களை பிரித்தல்.கதிரடித்தல்-நெல் மற்றும் கோதுமை பிரித்தெடுக்க விவசாயிகள் தண்டுகளை கடினமான பரப்பில் அடிக்கின்றனர்.தூற்றல்- அரிசி ,கோதுமை மற்றும் பிற உணவுகளின் உமியை நீக்க இம்முறை பயன்படுத்தப்படும். கைகளால் தெரிந்தெடுத்தல்-அரிசியில் இருந்து கல்லை நீக்க இம்முறையை பயன்படுத்துகின்றனர்.எளிதாக அடையாள காண முடியும்.காந்தப்பிரிப்புமுறை-காந்த தன்மை அற்ற பொருள்களை காந்த தன்மையுள்ள பொருட்களில் இருந்து பிரித்தெடுக்க இம்முறை பயன்படுத்தப்படும்.
தொகுத்துரைத்தல்
பொருட்களைப்பிரித்தல்-பிரித்தெடுத்தல்-வடிகட்டுதல்-சலித்தல்-கதிரடித்தல்-தூற்றல்-கைகளால் தெரிந்தெடுத்தல்-காந்தப்பிரிப்பு முறை

நம்மைச்சுற்றியுள்ள பருப்பொருள்கள்- பொருள்களை பிரித்தல், உணவுக்கலப்படம்(Leavel1)

ஆர்வமூட்டல்
*அரிசியில் எந்த பொருள்கள் எல்லாம் இருக்கும்?
*அதை எவ்வாறு  நீக்குவாய்?
*அதை நீக்க எதை பயன் படுத்துவாய்?
விளக்குதல்
தெளிய வைத்து இறுத்தல்-நாம்  வீட்டில் அரிசியை கழுவும் போது லேசான மாசுக்கள் நீரில் மிதக்கும் எடை அதிகமுள்ள அரிசி நீரில் மூழ்கி  அடியில் தங்கும் இம்முறை தெளிய வைத்து இறுத்தல்.கலங்கலான நீரிலிருந்து சேறு நீக்குதல்- ஒரு கலவையில் கனமான பொருள்கள் இருப்பின் அவற்றைச்சிறிது நேரம் அசைக்காமல் வைக்கும் பொழுது எடை அதிகமான பொருள் வண்டலாகத்தங்கி மேலடுக்கில் தெளிந்த நீர்மம் கிடைக்கும் இம்முறை படிய வைத்தல்.வடிகட்டுதல் -ஒரு கலவையில் உள்ள களி மண்,மணல் போன்ற கரையாத பொருள்களை வடிதாளை பயன்படுத்தி நீக்கும் முறை வடிகட்டுதல்.உணவுக்கலப்படம்-நாம் வாங்கும் பொருள்களில் தேவையற்ற பொருள்கள் தீங்கு விளைவிக்கும் பொருள்கள் காணப்படும் இதற்கு உணவுக்கலப்படம் எனப்படும்.
தொகுத்துரைத்தல்
தெளிய வைத்து இறுத்தல்-அரிசியில் மாசு நீக்குதல் -படியவைத்தல்-வடிகட்டுதல் -நுண்ணிய மாசு நீக்குதல்-உணவுக்கலப்படம்.

Thursday, September 13, 2018

நம்மைச்சுற்றியுள்ள பருப்பொருப்பொருள்கள்-தூயப்பொருட்கள் மற்றும் கலவைகள்(Leavel 1)

ஆர்வமூட்டல்
*பால் பிடிக்குமா?
*பாலில் காணப்படும் பொருள்கள் எவை?
*பால் தூய்மையானதா?
விளக்குதல்
பருப்பொருள் இரண்டு வகைப்படும் தூய பொருள், கலவை.நாம் கடையில் வாங்கும் பொருள்கள் அனைத்தும் தூய்மையானவையல்ல.தூயபொருள்- ஒரே தன்மையான துகள்கள்.தூயப்பொருள் என்பது தனிமம் அல்லது சேர்மம்.தனிமம் சிறிய துகள்களால் ஆனது.மூலக்கூறு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களின் சேர்க்கை.சேர்மம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டதனிமங்களின் சேர்க்கை.கலவை- பிரிக்ககூடிய இரண்டுக்கு மேற்பட்ட பொருள்களை கொண்டது. நீர்,புரதம் கொழுப்பு மற்றும் பிற பொருட்களை கொண்ட பால் கலவை ஆகும்.கலவையின் இயற்பியல் சேர்க்கை- 1இரண்டு தனிமம்2இரண்டு சேர்மம்3ஒரு தனிமம் மற்றும் ஒரு சேர்மம்
தொகுத்துரைத்தல்
பருப்பொருள்-தூய பொருள்-கலவை-மூலக்கூறு-சேர்மம்- கலவை-காற்று,பால்,தங்கம்

நம்மைச்சுற்றியுள்ள பருப்பொருள்கள்- பருப்பொருளின் இயற்பியல் தன்மை(Leavel 1)

ஆர்வமூட்டல் 
*நம்மைச்சுற்றி என்ன பொருள்கள் எல்லாம் காணப்படும்?
*உயிர் உள்ள பொருள்கள் எவை?
*உயிர் அற்ற பொருள்கள் எதனால் ஆனது?
விளக்குதல்
பருப்பொருள் நம்மைச்சுற்றி அனைத்து இடத்திலும் காணப்படும். பருப்பொருள் என்பது எடை உள்ளது இடத்தை அடைத்து கொள்வதுமாகும். மூன்று நிலைகளில் காணப்படும் அவை திண்மம்,நீர்மம்,வாயு.காகிதத்தாளிள் பல மில்லியன் அணுக்களால் ஆனது.அணுக்களை மின்சாரத்தின் மூலம் இயங்கும் எலக்ட்ரான் நுட்ப உருப்பெருக்கி மூலம் கண்டறியலாம்.பருப்பொருளின் இயற்பியல் தன்மை-நிறை உள்ளது இடத்தைஅடைத்து கொள்வது.இந்தியாவின் தத்துவ மேதை மற்றும் டெமாக்ரட்டிஸ்சு கருத்து. நம்மால் முடிவற்ற நிலைக்குபோக முடியாது என்பது இல்லை. நூலை மேலும் மிகச் சிறியதாக வெட்ட முடியாத அளவிற்கு ஒன்று உள்ளது எனில், அதுவே மூலக்கூறுகள் அல்லது அணுக்களாக அமையும்
தொகுத்துரைத்தல்
பருப்பொருள்-திண்மம்-திரவம்- வாயு-பல மில்லியன் அணுக்கள்-எலக்ட்ரான் நுட்ப உருப்பெருக்கி- மூலக்கூறுகளால் ஆனது.

நம்மைச்சுற்றியுள்ள பருப்பொருள்கள்- விரவுதல் (Leavel 1)

ஆர்வமூட்டல்
*நீரில் சர்க்கரையை போட்டால் என்ன நிகழும்?
*சர்க்கரை என்னவாகும்?
*நிகழ்வின் பெயர் என்ன?
விளக்குதல்
மேசையின் மீது ஒரு புத்தகத்தை வைத்து ஐந்து நிமிடம் கவனித்தல் நிகழும் மாற்றத்தை காணல்.ஒரு குவளை நீர் ஒரு துளி மை இட்டு நிகழும் மாற்றத்தை காணல்.திண்மத்தில் உள்ள துகள்கள்- மிககுறைந்த இடைவெளியுடன் திண்மத்தில் துகள்கள் நெருக்கமாகப் பொதிந்துள்ளதுஎ.கா.கல் திரவத்தில் உள்ள துகள்கள்- குறைந்த இடை வெளியுடன் தாறுமாறாக அமைந்துள்ளது எ.கா. நீர்.வாயுக்களில் உள்ள துகள்கள்-அதிக இடைவெளியுடன் காணப்படும். எ.கா. காற்று.திண்மம் மற்றும் திரவங்களின் அழுத்தப்பண்பை வாயுக்களின் அழுத்ததோடு ஒப்பிடுதல்- மூன்று உறிஞ்சு குழாய். 1சுண்ணக்கட்டி தூள்2.நீர்3.காற்று மூன்றையும் அழுத்த வேண்டும் சுண்ணாம்பு தூள் உள்ள குழாயை அழுத்த முடியாது. நீர் உள்ள குழாயை அழுத்த முடிகிறது.வாயு உள்ள குழாய் எளிதாக அழுத்த முடியும். திண்மநிலை,திரவநிலை,வாயு நிலை பொருள்களுக்கான வேறுபாடு அறிதல்.
தொகுத்துரைத்தல்
விரவுதல்-நீரில் மை விரவுதல்-திண்மம்-இடைவெளி குறைவு-திரவம்-துகள் தாறுமாறாகஇருக்கும்-வாயு-இடைவெளி அதிகம்-அழுத்த ஒப்பிடுதல்-திண்ம,திரவ,வாயு வேறுபாடு. 

பருப்பொருளின் சிறப்புப் பண்புகள்-பருப்பொருளின் சிறப்புப் பண்புகள்(Leavel1)

ஆர்வமூட்டல்
*பருப்பொருள் என்றால் என்ன?
*பால் எந்த நிலையில் உள்ளது?
*கல் எந்த நிலையில் உள்ளது?
விளக்குதல்
சிறப்பு பண்புகள்- பருப்பொருளின் துகள்ளுக்கு இடையே அதிக இடைவெளி உள்ளது. இது வெவ்வேறு பருப்பொருள்களில் வெவ்வேறாக இருக்கும்.நீரில் துகள்களுக்கு இடையில் இடைவெளி உள்ளது.சர்கரைத்துகள்கள் அந்த இடைவெளிகளை நிரப்புகின்றன.பருப்பொருளின் துகள்களுக்கு இடையே ஈர்பு விசை உள்ளது. இவ்விசையே துகள்களை பிணைக்கிறது.இத்தகைய ஈர்ப்பு விசை பருப்பொருளுக்கு பருப்பொருள் மாறுபடும்.இயற்பியல் நிலை அடிப்படையில் பருப்பொருள்களை திண்மம், திரவம்,வாயு என பிரிக்கலாம்
தொகுத்துரைத்தல்
சிறப்பு பண்புகள்-துகள்களுக்கு இடையே இடைவெளி அதிகம்-ஈர்ப்பு விசை -துகள்களை பிணைக்கிறது- பருப்பொருளுக்கு பருப்பொருள் மாறுபடும்-பருப்பொருள் நிலை-திண்மம்,திரவம்,வாயு.